இளநீர் பொங்கல்!
தேவையான பொருட்கள்:பச்சரிசி - 1 கப்இளநீர் - 1 கப்சர்க்கரை - 1.5 கப்இளநீர் வழுக்கை துண்டுகள் - 0.5 கப்தேங்காய் பால் - 2 கப்.செய்முறை:பச்சரிசியை, கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். தேங்காய் பால், இளநீருடன் தண்ணீர் கலந்து, நான்கு கப் வரும் வகையில் எடுத்து, அதில் பச்சரிசியை வேக வைக்கவும். வெந்த கலவையை நன்றாக மசிக்கவும். இதனுடன், சர்க்கரையை கலக்கவும்; பின், பொடியாக நறுக்கிய, இளநீர் வழுக்கை துண்டுகளை, கலவை மீது பரப்பி பரிமாறவும்; சுவையான இளநீர் பொங்கல் தயார். சத்துக்கள் நிறைந்தது. குழந்தைகளின் உடல் சூட்டை தணிக்கும். - ப.ஜெயந்தி, கோவை.