பூண்டு துவையல்!
தேவையான பொருட்கள்:பூண்டு - 100 கிராம் காய்ந்த மிளகாய் - 5சின்ன வெங்காயம் - 10உப்பு, புளி, வெல்லம், பெருங்காயம் - சிறிதளவுநல்லெண்ணெய், தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:வாணலியில், நல்லெண்ணெய் சூடானதும், உரித்த பூண்டு, காய்ந்த மிளகாய், நறுக்கிய சின்ன வெங்காயம், பெருங்காயம், உப்பு போட்டு வதக்கவும். ஆறிய பின் புளி, வெல்லம், தண்ணீர் சேர்த்து அரைக்கவும். சுவை மிக்க, 'பூண்டு துவையல்' தயார். சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்; இட்லி, தோசைக்கும் தொட்டு கொள்ளலாம்!- வி.விஜயலட்சுமி, சென்னை.