கடல் அட்டை!
கடலின் அடிப்பகுதியில் காணப்படுகிறது கடல் அட்டை.உலகளவில், 1,717 இனங்கள் உள்ளன. பல வண்ணம், வடிவம் மற்றும் அளவு உடையவை. ஆசியா - பசிபிக் பிராந்திய கடல் பகுதியில் அதிகம் உள்ளன.பொதுவாக, 10 முதல், 30 செ.மீ., நீளம் வளரும். ஆசனவாய் வழியாக நீரை உள்ளே இழுத்து சுவாசிக்கும். கடல் அடியில் படியும் வண்டலை உட்கொண்டு, துகள்களை அகற்றும். கடற்பாசி மற்றும் அழுகிய பொருட்களையும் உண்ணும். இதனால், கடல் சூழல் பாதுகாக்கப்படுகிறது. கடலின் அடியில், 15 ஆயிரம் அடிக்கு கீழேயும், 10 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.- விஜயன் செல்வராஜ்