மாமரத்தின் பயன்கள்!
சத்துமிக்க மாம்பழம் விரும்பும் உணவாக உள்ளது. மாமரத்தில் காய், இலை, பூ, பிஞ்சு, பருப்பு, பிசின் உட்பட அனைத்தும் நன்மை தரும்.மா இலை நோய்களை குணப்படுத்தும். கிராமங்களில் காயத்துக்கு மருந்தாக பயன்படுகிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில், இதை சமைத்து உணவாக சாப்பிடுகின்றனர். பண்டிகை நாட்களில் வீட்டு வாசலில் மாவிலை தோரணம் கட்டி மகிழ்கின்றனர் தமிழர்கள். இலையை சுட்டு சாம்பலாக்கி வெண்ணெயில் குழைத்து மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர்.மாம்பூவை உலர்த்தி தண்ணீரில் போட்டு குடிக்கலாம். மாம்பிஞ்சை உப்பு நீரில் ஊற வைத்து வெயிலில் உலர்த்தி உண்ணலாம். மாவடுவில் ஊறுகாய் தயாரிக்கலாம். மாம்பழம் முக்கனிகளில் ஒன்று. உடலுக்கு ஊட்டம் தரும். அளவோடு உண்டால் நல்ல பலன் கிடைக்கும். மாவிதையும் மருந்தாக பயன்படுகிறது. மாமரத்தின் பட்டையை சுத்தம் செய்து ஊறவைத்து நீரை அருந்தலாம். இது, ஊட்டம் தருவதுடன் தாகத்தையும் தணிக்கும்.- ரா.அருண்குமார்