உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர்மலர்!

என் வயது, 55; கூரியர் நிறுவனத்தில் பணி செய்கிறேன். குடும்பத்தில் பல ஆண்டு காலமாக தினமலர் நாளிதழ் வாசித்து வருகிறோம். இணைப்பு இதழ்களை போற்றி படிக்கிறோம். குறிப்பாக, சிறுவர்மலர் இதழ் பெரியோருக்கும் பயன்தரும் தகவல் சுரங்கமாக உள்ளது.இதழில், 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி துவங்கி, கடைசிப்பக்கம் வரை அனைத்தும், புதிய தகவல்களால் சுவாரசியம் ஊட்டுகிறது. ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு தயாராவோருக்கும் உதவும் செய்திகள் உள்ளன. வியப்பு தரும் தகவல்களின் தொகுப்பாக இல்லம் தேடி வருகிறது. குழந்தைகளுக்கு, நற்குணம், சிந்தனையை வளர்க்கும் நீதிக்கதைகள் சிறப்பாக உள்ளன! வருங்கால ஓவியர்களின் கைவண்ணத்தை, 'உங்கள் பக்கம்' பகுதியில் பார்த்து ரசிக்கிறோம். புதிர் போட்டி, புள்ளிகளை இணைத்து படமாக்கி வண்ணம் தீட்டி மகிழ்வது என, அறிவு தேடலை பூர்த்தி செய்கிறது. வாழ்க்கைக்கு வழிகாட்டியாக விளங்குகிறது. அறியாமை இருளில் தத்தளிப்போருக்கு அறிவு வெளிச்சம் தரும் கலங்கரை விளக்கமாக விளங்குகிறது, சிறுவர்மலர் இதழ். அதன் சேவை என்றும் தொடர வாழ்த்துகிறேன்!- சி.தங்கராஜ், திருப்பூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !