அக்டோபர்
தமிழகம்அக்., 1 : ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை முதல்வர் பழனிசாமி துவக்கினார். அக்., 16: ஆசிரியர் பணி நியமன உச்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 40, இதர பிரிவிற்கு 45 என தமிழக அரசு அறிவிப்பு. அக்., 23: கடந்த 9 ஆண்டுகளில் புதிதாக தமிழகத்தில் 3,050 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உருவாக்கப்பட்டன.* விருதுநகர் - எரிச்சநத்தம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பேர் பலி. அக்., 26: மருத்துவ படிப்பில் ஓ.பி.சி., பிரிவினருக்கு 50 சதவீத ஒதுக்கீடு இந்தாண்டு வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு. அக்., 27: மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை தலைவராக வி.எம்.கடோச், உயர்நிலை குழு உறுப்பினர்களாக டாக்டர் சுதா சேஷய்யன் நியமனம். அக்., 28: சட்டப்படிப்பு முடித்த வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3000 உதவித்தொகை.அக்., 30: மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல். * புதிதாக கட்டப்படும் நாமக்கல் மருத்துவ கல்லுாரியின் 'போர்டிகோ' இடிந்து விழுந்தது. இந்தியாஅக்., 3: உ.பி., யின் ஹத்ராஸில் கூட்டு பாலியல் துன்புறுத்தலில் உயிரிழந்த இளம் பெண் குடும்பத்தினருக்கு காங்., முன்னாள் தலைவர் ராகுல் ஆறுதல்.அக்., 7: இந்தியாவில் 24 பல்கலை., போலியானவை என யு.ஜி.சி., அறிவிப்பு. * 'ஸ்மார்ட்' சூப்பார்சானிக் ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி வளர்ச்சி கழகம்(DRDO) சோதித்தது. அக்., 8: ரிசர்வ் வங்கி துணை கவர்னராக ராஜேஸ்வர் ராவ் நியமனம். அக்., 9: எதிரிகளின் ரேடார், தகவல் தொடர்பு அமைப்பை தாக்கி அழிக்கும் 'ருத்ரம்' ஏவுகணை சுகோய் விமானத்தில் இருந்து சோதிக்கப்பட்டது. அக்., 12: எல்லை மாநிலங்களில் அமைக்கப்பட்ட 44 பாலங்களை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் துவக்கினார்.அக்., 15: ஐ.நா., அறிக்கையில் கடந்த 20 ஆண்டுகளில் அதிக இயற்கை பேரிடர் எண்ணிக்கையில் இந்தியாவுக்கு மூன்றாவது இடம். அக்., 17: 'பட்டினி குறியீடு - 2020ல் இந்தியாவுக்கு 94வது இடம். அக., 19: ஏழு மாதங்களுக்குப்பின் மும்பை மெட்ரோ சேவை துவக்கம். அக்., 20: சட்டசபை தேர்தலில் வேட்பாளர் தேர்தல் செலவு உச்சவரம்பு ரூ. 28 லட்சத்தில் இருந்து ரூ. 30.80 லட்சமாக அதிகரிப்பு. * மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப் சட்டசபையில் தீர்மானம். உலகம்அக்., 9: கொரோனா பாதிப்பிலிருந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் குணமடைந்தார். அக்., 10: ஆர்மீனியா - அஜர் பைஜான் இடையே போர் நிறுத்தம். அக்., 11: குவைத்தின் புதிய மன்னராக அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் பொறுப்பேற்பு. அக்., 20: சிலியில் அரசுக்கு எதிராக தொடங்கிய போராட்டம் ஓராண்டு நிறைவு. அக்., 22: சீனாவின் வங்கி ஒன்றில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கணக்கு வைத்திருப்பதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. அக்., 29: பிரான்ஸ் சர்ச்சில் பயங்கரவாதி கத்தியால் தாக்கியதில் மூன்று பேர் பலி.அக்., 30: துருக்கியின் இஜ்மிர் பகுதியில் 7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 27 பேர் பலி.இதுதான் 'டாப்'* அக்., 1: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் பயணிப்பதற்காக அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இரண்டு 'ஏர் இந்தியா ஒன்' சொகுசு விமானம் டில்லி வந்தடைந்தது. இதன் விலை ரூ. 8400 கோடி. * அக்., 7: அ.தி.மு.க., முதல்வர் வேட்பாளராக பழனிசாமி தேர்வு. 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் அமைப்பு. * அக்., 15: வியட்நாமுக்கு 'சிந்துவீரா' நீர்மூழ்கி கப்பலை இந்தியா வழங்கியது. இதுவே அந்நாட்டின் முதல் நீர்மூழ்கி கப்பல்.நீளமான சுரங்கப்பாதைஅக்., 3: ஹிமாச்சலில் உலகின் உயரமான இடத்தில் (10 ஆயிரம் அடி) அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை போக்குவரத்துக்கு திறப்பு. மணாலி - சிஸ்சூ வரையிலான இச்சாலை 9.02 கி.மீ., நீளம் கொண்டது. ஜெசிந்தா ஜெயம்அக்., 17: நியூசிலாந்து தேர்தலில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் மீண்டும் வெற்றி பெற்றார். இவர் பதவியில் இருக்கும் போதே குழந்தை பெற்ற உலகின் இரண்டாவது பெண் பிரதமர்.மறைந்திருந்து தாக்கும்அக்., 23: அணு, ரசாயனம், உயிரியல் போரை எதிர்த்து போரிடும் நீர்மூழ்கி கப்பல் 'ஐ.என்.எஸ்., கவரட்டி' இந்திய கப்பல்படையில் சேர்ப்பு. இது இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. கடல் விமானம்அக்., 31: முதல் கடல்வழி விமானப் போக்குவரத்தை குஜராத்தில் பிரதமர் மோடி துவக்கினார். இது ஆமதாபாத்தின் சபர்மதி ஆற்றில் இருந்து சர்தார் படேல் சிலை உள்ள கேவடியா வரை செல்கிறது.'தாமரை பூ' குஷ்புஅக்., 12: காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ., வில் சேர்ந்தார் நடிகை குஷ்பு. முன்னாள் ஐ.ஆர்.எஸ்., அதிகாரி சரவணக்குமார், பத்திரிகையாளர் மதன் ரவிச்சந்திரனும் பா.ஜ., வில் இணைந்தனர்.