உள்ளூர் செய்திகள்

கவிதைச் சோலை!

ஆடி அடங்கும் ஆன்மிகமடா!எல்.ஆர்.ஈஸ்வரி,'செல்லாத்தா' பாடாமல்எந்த அம்மனுக்கும் கிடைப்பதில்லைஆடிக் கூழ்!கறுப்புப் பணக்காரர்களின்கறை கழுவும் கரங்களால்களை கட்டுகிறதுஅன்னதானம்!ஊரைச் சுற்றி, மிரட்டி வசூலித்த,'ப்ளக்ஸ்' போர்டுகளில்அம்மனை விடஉயரமாய் உபயதாரர்கள்!ஆத்தாளை அலங்கரித்துவாசலில் வைத்துகலை நிகழ்ச்சியாகஅரை குறை அழகிகளின்மல... மல... மருதமல!நோயாளிகளையும் படிப்பாளிகளையும்நோகடிக்கும் ஒலி பெருக்கிநள்ளிரவு வீதியுலா வந்துதூக்கத்தைக் கெடுக்கும்வாண வேடிக்கை!அமைதியை நாடும்ஆன்மிகத்தில் அனாவசியஆர்ப்பாட்டங்கள் என்றால்கருவறையில் இருப்பாளாகருமாரி!மின்னும் மின்விளக்கில்அலங்கார அம்மன்திடீரென காணாமல் போனாளே...மின் வெட்டாநோஸ் கட்டா!— அ.யாழினி பர்வதம், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !