உள்ளூர் செய்திகள்

குழந்தைகளை கவர்ந்த கார்ட்டூனிஸ்ட்!

பழம்பெரும் மலையாள, 'கார்ட்டூனிஸ்ட்' டோம்ஸ்; இவர், சமீபத்தில், தன், 84ம் வயதில் காலமானார். இவரது, 'போபனும் - மோளியும்' என்ற முழு பக்க கார்ட்டூன், 'மலையாள மனோரமா' வார இதழில் வெளியானதை தொடர்ந்து, அவ்வார இதழுக்கு லட்சக்கணக்கான வாசகர்கள் உருவாகினர்.முப்பது ஆண்டுகள் கார்ட்டூனிஸ்டாக இருந்த இவர், இளமையில், குட்டநாடு என்ற குக்கிராமத்தில் வாழ்ந்த போது, பக்கத்து வீடுகளில், போபன் - மோளி என்று இரு வாலு பையன்கள் இருந்தனர். அவர்கள் செய்யும் குறும்புகளை வைத்து தான், கார்ட்டூன் வரைந்தார். அவர்கள் இன்று முதியவர்களாகி விட்டனர்.சமீபத்தில், கோட்டயத்தில் டோம்ஸ் மரணமடைந்த போது, போபனும், மோளியும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். கார்ட்டூனிஸ்டுக்கு, ஆறு குழந்தைகள்; தன் குழந்தைகளில் இருவருக்கு போபன் - மோளி என, பெயர் வைத்துள்ளார்.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !