உள்ளூர் செய்திகள்

பலன் தரும் கோகோ!

ஜூலை 7 - உலக சாக்லேட் தினம்கோகோ மர விதைகளில் இருந்து பெறப்படும் கொழுப்பு பாகத்துடன் சர்க்கரை, பால் மற்றும் பல இடு பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது, சாக்லேட். ஒரு கிலோ சாக்லேட் தயாரிக்க, 400 கோகோ பீன்ஸ்கள் தேவை.கோகோவில், வைட்டமின்கள், 'ஏ, பி, ஈ' மற்றும் போலிக் அமிலம், பிளாவனாய்டுகள், மக்னீசியம், இரும்பு மற்றும் துத்தநாகம் உள்ளது. இவை, உடல் இயக்கத்திற்கு தேவையான ஆற்றலை வழங்கி, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி ரத்த நாளங்கள் வலுப்படுத்த உதவுகிறது. எலும்புகளை வலுப்படுத்தி வயது முதிர்வை தடுக்கிறது.சாக்லேட்டில் சேர்க்கப்படும் கோகோ, இதய நோய், மாரடைப்பு, பக்கவாதம், புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவற்றை, 10 சதவீதம் குறைப்பதாக கூறுகிறது, ஆய்வு. 'உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும், ஐந்து நோய்களில், நான்கு நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் படைத்தது கோகோ...' என்கின்றனர், ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள். 70 சதவீதம் கோகோ கலந்த கருப்பு சாக்லேட்கள், உடல் உள் காயங்களை ஆற்றி, உள் வீக்கங்களையும் குறைப்பதாக, ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.கோகோவில் நிறைந்துள்ள, அதிகப்படியான, பிளாவனாய்டுகள், நோய் எதிர்பாற்றல், அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்தது. இவை புரோஸ்டேட், மார்பக புற்றுநோய், பெருங்குடல், கணையம் மற்றும் ரத்த புற்றுநோய்களை குணப்படுத்தும் ஆற்றலை கொண்டவை.கோகோவிலுள்ள ஆல்காய்டுகள், சுவாச ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் நாள்பட்ட ஒவ்வாமைகளை குணப்படுத்துவதாக கூறுகின்றனர். மேலும், தியோப்ரோமைன் என்ற, ஆஸ்துமா எதிர்ப்பு பொருளும் இதில் உள்ளது. கோகோவிலுள்ள பாக்டீரியா எதிர்ப்பு, நொதி எதிர்ப்பு பண்புகள், பல் ஆரோக்கியம் காக்கிறது.கோகோ, ஆக்ஸிடேடிங் ஸ்ட்ரெஸ்சை குறைக்கும் ஆற்றல் உடையது. சர்க்கரை நோயால் வரும் கண்புரை பாதிப்பை தடுக்கும் என்கின்றனர், பிரேசில் கேப்ரியல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.தினமும், 100 கிராம் டார்க் சாக்லேட் எடுத்துக் கொள்வதால், இதயநோய் மற்றும் மாரடைப்புக்கான அச்சுறுத்தல் குறைவதாக கண்டறிந்துள்ளனர். மாதத்திற்கு மூன்று சாக்லேட் பார்களை சாப்பிட்டாலே இதயம் ஆரோக்கியமாக இருக்கும். படிக்கும்போது சாக்லேட் சாப்பிட்டால், படிக்கும் புதிய தகவல்கள், நம் மூளையில் எளிதில் பதியுமாம்.சாக்லேட் சாப்பிடும் போது, நம் மூளையில் நேர்மறையான எண்ணங்கள் உருவாவதாக கண்டறிந்துள்ளனர். மேலும், அவை நம் உடலில் வளர்ச்சிதை மாற்றங்களை ஒழுங்குபடுத்துகிறதாம். வயதானவர்களின் நினைவுத்திறனையும் பாதுகாக்கிறது.காலை அல்லது மாலையில் சாக்லேட் சாப்பிடுவது, உடலிலுள்ள அதிகப்படியான கொழுப்பை கரைப்பதுடன், குளூக்கோஸ் அளவையும் குறைப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.சாக்லேட் சாப்பிடுவது பசி உணர்வை அதிகரிப்பதுடன், குடலில் நுண்ணுயிரிகள் வளர்ச்சிக்கும், இரவில் நல்ல துாக்கம் வரவும் உதவுவதாக கண்டறிந்துள்ளனர்.தோலில் ஏற்படும் சிராய்ப்புகளை சரி செய்யும் ஆற்றல் உடையது, கோகோ. தேங்காய் எண்ணெயில், கோகோ கொட்டையை அரைத்த பொடியை கலந்து தலைமுடியில் தேய்த்தால், பளபளப்பாகும். தழும்புகள் மீது பூசி வர, அவை மறையும். கோடையில் அதிகப்படியான வெயில் காரணமாக எழும் புற ஊதா கதிர்களின் அபாயகரமான விளைவுகளை குறைக்கும்.மூளை சுறுசுறுப்பிற்கு சாக்லேட் உதவும் என்பது, விஞ்ஞான உண்மை. எந்த நாட்டில் சாக்லேட் அதிகம் சாப்பிடுகின்றனரோ, அந்த நாட்டில் நோபல் பரிசு பெற்றவர்கள் அதிகம் இருக்கின்றனர். என்று, ஓர் ஆய்வு கூறுகிறது.உலகளவில் சுவிட்சர்லாந்து நாட்டில் தனிநபர் ஒருவர், ஆண்டிற்கு, 12 கிலோ சாக்லேட் சாப்பிடுகிறார். இங்கிலாந்து நாட்டில், 9 கிலோவும், ஜெர்மனியில், 5 கிலோவும் சாப்பிடுகின்றனர். ஆனால், இந்தியர்கள், 1 கிலோவும், சீனர்கள், 200 கிராம் சாக்லேட் மட்டுமே சாப்பிடுகின்றனர் என்கிறது ஆய்வு. அவர்களுக்கு வேறு இனிப்புகள் மீது தான் ஆர்வம். - ஜி. மாணிக்க ராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !