உள்ளூர் செய்திகள்

விலங்குகளை வேட்டையாடினால் இவரின் துப்பாக்கி தான் பேசும்!

ஆப்ரிக்க வனப் பகுதியில், மான், காண்டாமிருகம் உட்பட ஏராளமான விலங்குகள் உள்ளன. இதனால், வேட்டைக்காரர்களின் துப்பாக்கிகளுக்கு ஏராளமான விலங்குகள் பலியாகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, சர்வதேச வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு, அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றிய இன்னொசா ஜான்சன் என்ற பெண்ணை, பணியமர்த்தியுள்ளது. இவர், இலக்கை குறி தவறாமல் சுடுவதில் தேர்ச்சி பெற்றவர்.வனவிலங்கு பாதுகாப்பு படை என்ற பிரிவை உருவாக்கி, அதில் உள்ளவர்களுக்கு, பயிற்சி அளித்து வருகிறார் இன்னொசா. விலங்குகளை வேட்டையாடுவோரை துப்பாக்கியால் சுட்டோ, உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிப்பது தான் இந்த அதிரடிப் படையின் பணி. இப்போது, தான்சானியா வனப் பகுதியில் இன்னொசா, துப்பாக்கியும், கையுமாக உலா வருவதால், வேட்டைக்காரர்கள் கிலியில் உள்ளனர்.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !