புதுமையான சுற்றுலாத் தலம்!
அருணாசலப் பிரதேச மாநிலத்தில், டெசு மற்றும் நாம்சாய் பகுதிகளுக்கு இடையே, டிகாரு என்ற சுற்றுச்சூழல் சார்ந்த தங்குமிடம் உள்ளது.இங்கு, ஓடும் நீரோடையில், மேஜை - நாற்காலி போட்டு, சுற்றுலா பயணியருக்கு, உணவு பரிமாறுகின்றனர். மேலும், இன்னொரு புதுமையையும் செய்துள்ளனர்.நீரோடையில் மீன்கள் அதிகம் உள்ளதால், இங்கு சாப்பிட வருபவர்களிடம், துாண்டில் ஒன்று வழங்கப்படுகிறது. அதை பயன்படுத்தி, மீன் பிடித்து கொடுத்தால், உடனடியாக வறுத்துக் கொடுக்கின்றனர். இதற்காகவே நிறைய சுற்றுலா பயணியர் இங்கு வருகின்றனர்.— ஜோல்னாபையன்