கவிதைச்சோலை - தை பிறந்தால்...
தை பிறந்தால் வழி பிறக்கும்உழவன் கை உயர்ந்தால் நாடு வளம் கொழிக்கும்!தை... தை என, தை மகள் வந்தாள்தித்திக்கும் நங்கையாய் திருமகள் உதித்தாள்பொழுதும் புலர்ந்தாச்சுஇனிய பொங்கலும் வந்தாச்சுவசந்தமும் வந்தாச்சுவாழ்வில் செழிப்பும் உண்டாச்சு!உலகுக்கு உணவை அளிக்கும்உழவனின் உள்ளம் பொங்கசிந்தை துலங்கி உயர் எண்ணம் மிளிரகனிவாய் மலர்வதே தைப் பொங்கல்!காலை கதிரவனை வணங்கி, நன்றியோடுஆதாயம் எதிர்பாராத ஆதவனுக்கும்ஓயாமல் உழைத்த காளைக்கும்நன்றி படையல் இயற்கை எழிலோடு!உழவன் வீட்டில் சர்க்கரைப் பொங்கல்காளைக்கும் இங்கே மாட்டுப் பொங்கல்...கரும்பாய் அனைவரின் நாவில் இனித்திடகுறும்பாய் சிறார்கள் மாட்டை விரட்டிட...பொங்கலோ பொங்கல் ஒலித்திடும் திருநாளில்ஜல்லிக்கட்டு காளையோ ஜனங்களை முட்டுதுகாணும் பொங்கலும் கிட்ட நெருங்குதுகடைதனில் மக்கள் கூட்டமோ அலை மோதுது!சுற்றமும், நட்பும் சூழஉற்றார், உறவினர் வாழ்த்தமத, இன, மொழி பேதமின்றி நல்லிணக்கமாய்காண்போர் நெஞ்சம் பொங்கிடவே இனியகாணும் பொங்கலில் உள்ளம் மகிழ்ந்திடுமே!நம் எண்ணங்கள் வான் நோக்கி இருக்கட்டும்உண்மைகள் நம்மைச் சூழ்ந்து இருக்கட்டும்சிந்தை மகிழச் சீர் பெருகட்டும் நம் வீட்டினில்ஆரோக்கிய செல்வம் தழைக்கட்டும் நம் நாட்டினில்பொங்கலோ பொங்கலென, பொங்கட்டும் தமிழர் வாழ்வு தங்கட்டும் செல்வங்கள்!புனிதா சங்கர், சென்னை.