யானைக்கு தாலாட்டு!
யானையை தாலாட்டு பாடி துாங்க வைக்கும் அதிசய பாகன் ஒருவர், கேரள மாநிலம், கொல்லத்தில் இருக்கிறார்.சிறு வயதில் இருந்தே யானைகள் மீது பிரியமாக இருப்பார், ஸ்ரீகுமார். இதுவே, பிற்காலத்தில் அவரை யானை பாகன் ஆக்கியது. ஆரம்பத்தில், மேடை பாடகராக இருந்தவர். இவர் வீட்டு பக்கத்தில் வினையச்சந்திரன் என்ற ஒரு யானை இருந்தது. எப்போதும் அந்த யானை அருகே நின்று, இனிமையான பாடல்களை பாடுவார்.இவர் பாடுவதை யானை ரசிப்பதாக தெரியவே, மெல்ல மெல்ல யானை அருகே சென்று அதை தொட்டு, தாலாட்டு பாடல்களை பாடத் துவங்கினார். பிறகு, அரசிடம் முறைப்படி லைசென்ஸ் பெற்று, பாகன் ஆனார். அவர் யானையை தொட்டு தடவி பாட துவங்கினால், யானை துாங்கி விடும். — ஜோல்னாபையன்