கவிதைச்சோலை!
அழுகை!குழந்தையின் முதல் அழுகைபெற்றோருக்குபெருமிதத்தை தருகிறது!அடுத்த அழுகைஅவன் பசியைமற்றோருக்கு பறை சாற்றுகிறது!அடுத்தடுத்த அழுகைகள்ஏக்கங்களை எடுத்துரைக்கிறது!சில அழுகைகள்ஆனந்தத்தின் அடையாளமாகிறது!பல அழுகைகள்துக்கத்தின் துலாக்கோலாகிறது...ஆற்றாமைகளுக்கும், அவலங்களுக்கும்வடிகாலாகிறது!அழுகையால்துயரங்கள் துடைக்கப்படுகிறதுதுன்பங்கள் குறைக்கப்படுகிறது!அழுகைஉண்மையை உணர்த்தும்சாட்சியாகிறது...உள்ளுக்குள்ளே தீ வளர்த்துஉறுதி ஊட்டும் ஆயுதமாகிறது!விசும்பல், கேவல்கதறல், ஒப்பாரிஎன வெளிப்படும்அழுகைமனிதனின் மூலமொழி!உலகோரின் உயிர்மொழி!அதுஎல்லாம் அளிக்க வல்லது!எதையும் அழிக்க வல்லது!-- எஸ்.ஆர்.சாந்தி, மதுரை.