உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

விழித்துக் கொள்!* இளைய சமுதாயமே...வெறுப்பு முகமூடிஅணிந்துயாரைப் பார்த்தாலும்எதிரியாய்...* அண்ணனேஅன்னியனாய்...தம்பியேபகைவனாய்...உறவேபகையாக...இல்லம்போர்க்களமாய்...உலகம்சூன்யமாய் தெரிகிறது!* மனது வெம்பி...சூழ்நிலைக் கைதியாய்நான்கு சுவருக்குள்முடங்கச் செய்கிறது!* நம்பிக்கையற்றுஜீவனற்றுமுதுகெலும்பற்றுவாழ்க்கை இழந்துவீழச் செய்கிறது!* இளைய சமுதாயமே...இனியாவதுவிழித்துக் கொள்...அன்பு அரிதாரம் பூசியாரைப் பார்த்தாலும்நண்பனாய்...* அன்னியனேஅண்ணனாய்...பகைவனேதம்பியாய்...பகையேஉறவாய்...* போர்க்களம், சூன்யம்எல்லாம் மாறிதன்னம்பிக்கையுடன்ஜீவனுடன்புத்துணர்ச்சியாய்புறப்பட வைக்கும்!* இளைய சமுதாயமே...நேசிக்க கற்றுக் கொள்மன்னிக்க கற்றுக் கொள்பொறுமை காக்க கற்றுக் கொள்இதுவே வாழ்வின்மந்திரங்கள்!* அன்பு —எதிரியையும்பணிய வைக்கும்!* இளைய சமுதாயமே...விழித்து கொள்வெறுப்பு முகமூடிஅணிந்து...எதிரில், எதிரியாய்நின்று சாதிப்பதை விட...* அன்பு முகம் காட்டி ஆதரவாய் அருகில்நின்று சாதிப்பதே எளிது!* இளைய சமுதாயமே...விழித்துக் கொள்!— கவிதா வீராசுவாமி, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !