கவிதைச்சோலை!
மனமருந்தே மாமருந்து!* புண்ணிற்கு மருந்திடலாம்மனதிற்கு மருந்திட முடியுமா?முடியும்...அன்பான ஆறுதலான வார்த்தைகளால்!* புற அழுக்கை நீக்கலாம்அக அழுக்கை நீக்க முடியுமா?முடியும்...அப்பழுக்கற்ற நேர்மை திறத்தால்!* கை, கால் முறிவிற்குகட்டுப் போடலாம்மன முறிவிற்கு கட்டுப்போட முடியுமா?முடியும்...பரஸ்பர சமாதான பேச்சுகளால்!* மலச்சிக்கலுக்கு மருந்துண்டுமனச் சிக்கலுக்கு மருந்துண்டா?உண்டு...மனதார மனம் விட்டு பேசுவதால்!* உடல் சோர்வுக்கு வழி உண்டுமனச்சோர்வுக்கு வழி உண்டா?உண்டு...தன்னம்பிக்கையுடன் செயலாற்றுகையில்!* உடல் வலி போகும்உள்ளத்து வலி போகுமா?போகும்...நல்ல வழியை கடைபிடிக்கையில்!* வாய்ப்புண்ணுக்கு மருந்துண்டுவாடிய மனதிற்கு மருந்துண்டா?உண்டு...வாய்விட்டு சிரிக்கையில் !* ஆக...அங்கத்திற்கு மருந்திடுவதை விடஅகத்திற்கு மருந்திடுவதே மேல்...அந்த மன மருந்தேஅனைவருக்கும் தேவையானமாமருந்து!— முத்தூஸ், தொண்டி.