உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

எங்கே தேடுவேன்?* புழுதிப்படர்ந்த சாலையில்வெப்பக் காற்றைஉள்வாங்கிநெருப்பை உமிழ்ந்துகொண்டே தேடுகிறேன்...* ஆடி ஓடி விளையாண்டஅகன்ற வீதிகளை...* பாதசாரிகள் படுத்துறங்கநிழல் தந்தபாதையோர புளியமரங்களை...* தும்பி பிடிக்கதம்பியர் புடைசூழ சென்றதான் தோன்றி மலையை...* காட்டுக் குயில்களின்கானம் ஒலித்தகருவேலம் காடுகளை...* அகன்று விரிந்துஆர்ப்பரித்துச் சென்றஆற்றுப் படுகையை...* காட்டு வெள்ளம்வந்து போகும்காட்டாறு ஓடைகளை...* பார்த்து ரசித்துபரவசப்பட்டுப் போனபசுமையான வயல்வெளிகளை...* கருத்தை கவர்ந்தகாதலியுடன்கதைகள் பல பேசிகாலம் கரைத்தகண்மாய்க் கரைகளை...* என் இளமையைதாலாட்டிய இயற்கையே...* பேராசை பேய்களின்பெருத்த வயிற்றுக்குள்இரையாகிப் போனஉன்னை எங்கே தேடுவேன்?— ப.லட்சுமி, கோட்டூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !