கவிதைச்சோலை!
நீயே என் பஞ்சபூதம்!வண்ணங்களில் குளித்தஓவியமாய் திரியும் பட்டாம்பூச்சியைஅவ்வளவு பிடிக்குமென்றாய்சிறகுகள் முளைத்தன எனக்கு!உலகின் உயிர் நனைக்கும்மழையில் நனைதலில்விருப்பம் அதிகம் என்றாய்உன் மழைப்பேச்சில்வானவில்லாய் வளைந்தேன்!கோவில் வாசலில்கம்பீரமான தூணாய் நிற்கும்யானையை பிடிக்கும் என்றாய்ஆசிர்வாதம் வாங்கும் பக்தையாய்தலைகுனிந்து நின்றேன்!பூக்களில் என்ன பிடிக்கும் என்றேன்...செம்பருத்தி எனச் சிரித்தாய்இரு கன்னங்களிலும்குழைத்து பூசிசிவந்தேன் அந்நிறத்தை!எப்போதுதான்என்னை சொல்வாய்என்ற எதிர்பார்ப்பில்பிறகென்ன பிடிக்குமென்றேன்?நீள்வானம், நீலக்கடல்நீந்தும் நதி, மலைமுகடு எனஅடுக்கிக் கொண்டே சென்றாய்...தாளமுடியா தவிப்புடன்இதில் நான் எங்கே இருக்கிறேன்என்றேன்!நீயே என் பஞ்சபூதமாகவும்இருக்கிறாய்என்று குறுஞ்சிரிப்பை உதிர்த்தாய்!— இ.எஸ்.லலிதாமதி,சென்னை.