உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

கண்கூடாத காண்போம்!ஒவ்வொருவளையத்தின் பலத்தில்ஒட்டுமொத்தசங்கிலியின் பலம்உறுதிப்படுத்தப்படுகிறது!தேனீக்கள்சுமந்து செல்லும்ஒவ்வொரு துளிதேனின் தித்திப்புமொத்த தேனின்தித்திப்பாகிறது!ஒவ்வொரு மணியையும்தேர்ந்தெடுத்துபொருத்துவதால் தான்ஒட்டுமொத்த ஆபரணமும்ஒளிர்கிறது!ஒவ்வொரு சொல்லும்தேர்ந்தெடுத்துஎழுதப்படுமானால்ஒட்டுமொத்த காவியமும்தேர்ச்சிபெற்று விடுகிறது!ஒவ்வொரு துகளிலும்ஒட்டுமொத்தத்தின் பலம்ஒளிந்திருக்கும் போது...நிகழ் காலத்தின்ஒவ்வொரு நொடிக்குள்ளும்எதிர்காலம் அனைத்தும்இருக்கத்தானே செய்யும்!நிகழ்காலத்தின்ஒவ்வொரு வினாடியிலும்நம் உண்மையானஉழைப்பைக் கொடுத்துநியாயம் செய்வோம்!பிறகென்ன...நம் ஒட்டுமொத்த எதிர்காலமும்நிச்சயம் நமக்குநியாயம் செய்வதைகண்கூடாகக் காண்போம்!— என்.ரமேஷ், சென்னை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !