கவிதைச்சோலை!
ஏக்கம்! உன்னை நினைத்துவிடுமுறையில் குதூகலிக்கசொந்த ஊர் வந்தேன்!ஓர் இரவில்என்னைத் தழுவிசில மணித்துளியிலேயேமறைந்தாய்!விட்ட குறை தொட்ட குறையாய்உன் வாசம் சுமந்துநகரம் நகர்ந்தேன்!நானில்லாத நாட்களில்வந்து போனதாய் கூறினர்உன்னுடன் பயணித்த நாட்களில்உன் அருமை தெரியவில்லைகட்டி வைக்கவும் தோணவில்லை!என்று தணியும் உன் கோபம்எப்போது தீரும் என் தாகம்நீ வந்ததும் உன்னைஉச்சி முகர்ந்து கொள்ளகாத்திருப்பது நான் மட்டுமல்லஎன் தாய்நாடும் தான்!மழையே வருவாயோ...உன் இதழ் துளிஎங்களுக்கு உயிர் துளிநினைவில் கொள் போதும்!ரா.நாஞ்சிலழகன், கன்னியாகுமரி.