உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

வந்துவிடு வளைகரங்களுக்குள்...நீ எனக்காக காத்திருக்கும்அந்த தேநீர் கடை வாசலில்இப்போதும் ஒரு குவளைகாத்துக் கொண்டிருக்கிறது!உன் விழி பருகிஉரையாடி மகிழ்ந்ததெருவின் வேப்ப மர நிழல்இன்னும் அசைந்துகொண்டுதான் இருக்கிறதுகூடுதல் இனிப்புடன்!இருவருமாய் சேர்ந்து வலம் வந்தகோவில் பிரகாரத்தின்மணி இசைத்துக்கொண்டு தான் இருக்கிறதுஇப்போதும்!நாம் இணைந்து நடக்கையில்படிந்த காலடிச் சுவடுகள்வரலாற்றுப் படிமங்களாய் தான்பதுக்கி வைத்திருக்கிறதுஅந்த கடற்கரை மணற்பரப்பு!நீ தான்என் ஞாபகங்களைத் தொலைத்துதொடுவானத்துக்கு துார தெரியும்வானவில்லாய் மாறிவிட்டாய்என் வளை கரங்களுக்குள் வராமல்!— இ.எஸ்.லலிதாமதி, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !