கவிதைச்சோலை!
வெற்றியின் வெளிச்சத்தை... தள்ளிப்போடும் எண்ணத்தைகிள்ளிப் போடுங்கள்!ஏனென்றால்தள்ளித் போடுவதுவேலைகளை மட்டுமல்லஉங்களின் வெற்றிகளையும் தான்!'நாளை பார்க்கலாம்' என்றுஎண்ணும்போதேவெற்றியின் விலாசத்தைதொலைக்கத்துவங்கி விடுகிறீர்கள்!உழைப்பதைதள்ளிப் போடும்போதுஉயர்வின் படிக்கட்டுகளைஉடைக்கத்துவங்கி விடுகிறீர்கள்!நன்றி சொல்வதைதள்ளிப் போடும்போதுநல்ல மனிதர் பட்டியலிலிருந்துவிடுபடத்துவங்கி விடுகிறீர்கள்!வாழ்த்துவதைதள்ளிப் போடும்போதுகிளைகளாய் விரியும்உறவுகளின் வேர்களைவெட்டத்துவங்கி விடுகிறீர்கள்!ஆறுதல் சொல்வதைதள்ளிப் போடும்போதுகுற்ற உணர்வைநெஞ்சில் குடியேற்றதுவங்கி விடுகிறீர்கள்!பாராட்டுவதைதள்ளிப் போடும்போதுமகிழும் தருணத்தைமரணப்படுத்தி விடுகிறீர்கள்!கட்டணம் செலுத்துவதைதள்ளிப் போடும்போதுஅபராதத்திற்குஅடிக்கல் நாட்டத்துவங்கி விடுகிறீர்கள்!ஆம்...கடமைத் தள்ளிப் போகும்போதுகடன் பத்திரத்தில்கையொப்பமிடத்துவங்கி விடுகிறீர்கள்!எனவேதள்ளிப் போடும் எண்ணத்தைகிள்ளிப் போடுங்கள்...வெற்றியின் வெளிச்சத்தைவாழ்வெல்லாம்அள்ளிக் கொள்ளுங்கள்!— கவிதாசன், கோவை.