உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

நன்றி சொல்ல ஒருநாள்!உலகிற்கு நன்றி சொல்லநாம் மறந்திருக்கலாம்...ஆனால், உலகம் நமக்குநன்றி சொல்லும் நாளேஉழைப்பாளர் தினம்!காடு மேடாய்கட்டாந்தரையாய் கிடந்த நிலத்தைபொன் விளையச் செய்த கரங்களைபூமித்தாய் முத்தமிடும் நாளேஉழைப்பாளர் தினம்!தறிகெட்டு ஓடியஆறுகளுக்கு அணை கட்டிவீரியம் கொண்டுவிழும் அருவிகளில்மின்சாரம் எடுத்துஇருள் துடைத்து, ஒளிரச் செய்தகரங்களை கவுரவிக்கும் நாளேஉழைப்பாளர் தினம்!உப்பிட்டவரைஉள்ளளவும் நினைக்கவியர்வை உப்பைவிதைத்த உழைப்பாளிக்குவெற்றியை விருதாக்கிஉலகம் எடுக்கும் விழாவேஉழைப்பாளர் தினம்!பூமியின் இன்றைய வளர்ச்சிக்கும்மலர்ச்சிக்கும்உழைப்பாளிகளின் உழைப்பேஉரமாய் இருந்திருக்கிறதுஅதற்கான அங்கீகாரமேஉழைப்பாளர் தினம்!வான் மண்டலத்தில்கனவு காட்சிகளாய்வலம் வந்த கோள்களுக்குசெயற்கைக்கோள் அனுப்பியசெயலுக்கான அடையாளம்உழைப்பாளர் தினம்!பணிச் சுமைக்கு மத்தியில்நினைக்க மறந்துவிட்டஉழைப்பாளியைநினைவூட்ட வருகிறதுஉழைப்பாளர் தினம்இந்த நாள்...உழைப்பாளருக்குநன்றி சொல்லவொரு திருநாள்!உலகம் போற்றும்உழைப்பாளர் தினத்தில்வியர்வை சிந்தும் விரல்களை பிடித்துநன்றியோடு நலம் விசாரிப்போம்...ஏனெனில்உழைப்புதனி மனித பிழைப்பிற்கானவேலை அல்லதரணியின் செழிப்பிற்கான சேவை!மீரா மணாளன், நெல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !