உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

வளர்ப்பு...மகள் பிறந்த நேரம் தான்மனை வாங்கினேன்வீடு வாங்கினேன்கார் வாங்கினேன்வியாபாரம் பெருகியது என்றுஎன்னை தரையில்கால் படாமல் தேவதை போல்செல்லமாக துாக்கிவளர்த்தீர்களே அப்பா!கேட்டதெல்லாம்வாங்கி தந்தீர்கள்...பொன்னும் மணியும் பூட்டிஅழகு பார்த்தீர்கள்... தினம் தினம்அறுசுவை விருந்தளித்தீர்கள்!நம்மை விட மேலானபணக்கார வீட்டில்மாப்பிள்ளை பார்த்துஊரெல்லாம் கூட்டிபிரமாண்டமாகதிருமணம் செய்து கொடுத்தீர்கள்!வாழ்க்கை சக்கரம் சுழலும்என்பதையும்,வாழ்க்கை பாதைமேடு, பள்ளம் நிறைந்தது என்பதையும்வறுமை, வளமைமாறி மாறி தான் வரும்என்பதையும் ஏன் அப்பாசொல்லிக் கொடுக்கவில்லை?குடும்ப சண்டை, சொத்து பிரிப்புவியாபாரம் பாதிப்பு, வழக்குஎல்லாம் சேர்த்து, மாளிகைமண் குடிசையாகி விட்டதே அப்பா...சமைக்கவும், பெருக்கவும்துவைக்கவும்ரேஷன் வாங்கவும்நகர பேருந்தில் பயணிக்கவும்இனி தெரிந்து கொள்கிறேன் அப்பா!எங்களை பற்றிநீங்கள் கவலைப்படாதீர்கள்...மாமனார் உதவியை எதிர்பாராதஉங்கள் மருமகனுக்காகபெருமைப்படுங்கள்!நாங்கள் மகிழ்ச்சியாகஇருக்கிறோம்...கூழானாலும் பங்கிட்டுகுடிக்கிறோம்...சொத்து, சுகம்சொந்த, பந்தம் போனாலும்மனதளவில் நலமாக இருக்கிறோம்!உங்களிடம் நான் கற்றுக்கொண்டபாடம் ஒன்று தான் அப்பா...என் மகளை உங்களைப் போல் செல்லமாக வளர்க்கக் கூடாது என்பது தான் அது!— சொல்கேளான் ஏ.வி.கிரி, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !