உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

ஓலைப்பெட்டி!பெரும் கடை வீதிகளில் மட்டுமின்றிசந்து பொந்துகளில் அமைந்திருக்கும்அந்த சிறு சிறு கடைகளை தேடிஎந்நாளிலும் இல்லாத் திருநாளாகஅலைந்து திரிந்தேன் நான்!கடை ஒன்றை கண்டதும்பாய்ந்து சென்றுஉங்களிடம் இருக்கிறதா, இருக்கிறதாஎன, வினவினேன்...இல்லையே எனும் பதில் கேட்டதும்அடுத்த கடைத் தேடிசென்றேன் நான்!அது ஒரு அண்ணாச்சி கடைஇங்கு இல்லாமல் இருக்காதுஎனும் நம்பிக்கையுடன்அங்கு சென்று வினவினேன்கடை பையன்,'இல்லையே, இன்று போய்நாளை வாருங்கள்...'என, கூறக்கேட்டுஅடுத்த கடை தேடி புறப்பட்டேன்!ஆஹா...அவரிடம் நிச்சயம் இருக்கும்எனும் நம்பிக்கையுடன்கடை நோக்கி விரைந்தேன்...'அடடா முடிந்து விட்டதே...மச்சான் கடையில் பாருங்கள்...'எனும் அவர் பதில் கேட்டுஅடுத்த தெருவுக்கு விரைந்தேன்!கூட்டமாய் இருக்கிறஅவர் கடை நம்பிக்கை தந்தது...வரிசையில் நின்று,நாலு பேர் கடந்து சென்றதும்அவரிடம் கேட்டேன்...'ஐயா, உங்களிடம் இருக்கிறதா?''அடடா... கடைசி இருப்பைஉங்களுக்கு முன்னால் நின்றவருக்குஇப்போதுதானே கொடுத்தேன்...'அவர் பதிலில்நொந்து போய் வீடு திரும்பினேன்!வீட்டில் பாட்டியின் குரல் கேட்டது...உலக நடப்பு தெரிந்துபாட்டி கையோடு கொண்டு வந்திருந்தஅவளது ஓலைப் பெட்டியில்நிறைந்திருந்தது,'கொரோனா'வையும்அதன் அப்பனையுமே விரட்டிடும்மூலிகைகளின் கூட்டு மருந்து!தார்சி எஸ்.பெர்னாண்டோ, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !