உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

தோற்றுப்பார்!யார் சொன்னதுவெற்றி மட்டும் தான்நல்வழியென்று...தோற்றுப் பார்விழுந்த வேகத்தில்வீறு கொண்டு எழுவாய்விதையைப் போல்!எழுந்த வேகத்தில்அவமானங்களைசினம் கொண்டுதுாசியென தட்டி களைவாய்செடியை போல்!களைந்த வேகத்தில்உழைப்பில் வேகம் கொண்டு வளர்வாய்மரத்தை போல்!வளர்ந்த வேகத்தில்செயலில்விவேகம் கொண்டு செழிப்பாய்கிளையைப் போல்!செழித்த வேகத்தில்மற்றவர்களை தலை நிமிர்த்திபார்க்கச் செய்வாய்வாசம் வீசிபூக்களை போல்!பார்க்க செய்த வேகத்தில்அவர்களுக்குஉதவியும் செய்வாய்இனிக்க வைத்துகனிகளை போல்!இனிக்க வைத்ததேஇன்பமென்றுதலைக்கனம் ஏதுமின்றிநிம்மதி பெருமூச்சு விடுவாய்சுயநலமறியாகாற்றைப் போல்!ஆம்...யார் சொன்னதுவெற்றி மட்டும் தான்நல் வழியென்று...தோற்றுப் பார்!மு.கவுந்தி, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !