உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

மஹாத்மாவே... மறுபடியும் பிறக்க வேண்டாம்!அண்ணலே...நீங்கள் போதித்த அஹிம்சைஅறவே ஒழிக்கப்பட்டுகருவறை துவங்கிகல்லறை வரைவன்முறை மட்டுமேவழக்கமாகி விட்டது!அற வழி என்றஉங்கள் கொள்கை மறந்துகுடிசை துவங்கிகோபுரம் வரைஊழலும், கொள்ளையும்கொடி கட்டி பறக்கிறது!ஜாலியன் வாலாபாக்படுகொலைக்காகநீங்கள் உருவாக்கியதுஒத்துழையாமை இயக்கம்கொலைகளை வியாபாரமாக்கும் வித்தையை ஒற்றுமையாகசெய்வது தான் இங்கேவழக்கமாகி விட்டதே!வெள்ளையனுக்காகநீங்கள் உருவாக்கியதுவரி கொடா இயக்கம்இல்லை என்ற நிலையிலும்இன்று, நாங்கள் வரி கட்டாதபொருட்களே இல்லை!உப்புக்காக நீங்கள்தண்டி யாத்திரை சென்றீர்கள்தவறு செய்பவர்களைஒப்புக்கு கூட யாரும்இங்கே தண்டிப்பதில்லை!நீங்கள் பிறந்தஇந்த ஒரு நாளாவதுமதுவை மறப்போம்புலாலை புறக்கணிப்போம்என்பதெல்லாம்உங்கள் மேல் கொண்ட அளவற்றமரியாதையால் அல்ல...அளவில்லாமல் சாப்பிடத்தான்!பொது நலம் இங்கேகுழி தோண்டி புதைக்கப்பட்டதுசுயநலம் மட்டுமே இங்கேவாடிக்கையாகி விட்டது!மஹாத்மாவே...மறுபடியும் பிறந்து விடாதீர்கள்நாடு முழுதும்'நாதுராம் கோட்சே'க்கள் தான்நடமாடுகின்றனர்!வே. விநாயகமூர்த்தி, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !