கவிதைச்சோலை!
நன்றி...இந்த மண்ணிலிருந்து எடுத்து தான் செங்கல், சிமென்ட்,ஜல்லி தயாரித்து வானளாவகட்டடங்கள் கட்டுகிறோம்!இந்த மண்ணிலிருந்துஎடுத்து தான் இரும்பு, தங்கம்,பித்தளை, வெள்ளி, கண்ணாடிபயன்படுத்துகிறோம்!இந்த மண்ணிலிருந்துஎடுத்து தான் பெட்ரோல், டீசல்,'காஸ்' - பிளாஸ்டிக் பொருட்கள்உருவாக்குகிறோம்!இந்த மண்ணிலிருந்துவிளைவித்து தான் கீரை, காய்கறி,கனி வகைகள் உணவாகஉட்கொள்கிறோம்!இந்த மண்ணிலிருந்து எடுத்து தான் அணுவையும்,அணுகுண்டும், மின்சாரமும்தயாரிக்கிறோம்!இந்த மண்ணிலிருந்துகற்றுக் கொண்டு தான் கல்வி,அறிவியல், பொறியியல், மருத்துவம்போதிக்கிறோம்!இந்த மண்ணிலிருந்துகடலைக் கடக்கவும், விண்ணில்பறக்கவும், கணினி வளர்க்கவும்கற்றுக் கொடுக்கிறோம்!இத்தனை சிறப்பு வாய்ந்த இந்தமண்ணிற்கு மனித குலம் என்னகைம்மாறு செய்யப் போகிறதுமண்ணுக்குள் சமாதி ஆவதைத் தவிர?சொல்கேளான் ஏ.வி.கிரி,சென்னை.