கவிதைச்சோலை!
இளமை தான் உனது மூலதனம்!மேதகு இளைஞனே...மெல்ல யோசி... நீசிந்திக்கும் நொடியில் உன்எதிர்காலம் சிறக்கட்டும்!காதல் எனும் கானலை தேடிஇளமை எனும்வசந்த காலத்தைவிரயமாக்கி விடாதே!வாழும்போதும்தாழும்போதும்உன்னை தாங்கிபிடிப்பது பணம்!உழைத்தால் ஓரளவுபணம் கிடைக்கும்படித்தால் பதவி கிடைக்கும் பணம் கொட்டி விடாது!உனக்குள் முடிவெடுபணமா, பதவியா, புகழாமுயன்றால் முடியாததுஎதுவுமில்லை!எதையும் செய்யுமுன்நான்கு முறை யோசிநன்மை தீமைகளைஅலசி ஒரே முடிவெடு!எது உன் லட்சியம்அதை நோக்கியேஉறக்கத்திலும் நீசெயல்பட வேண்டும்!எதைச் செய்தாலும்தடைகளே வரவேற்கும்துவளாமல் துணிவுடன்இலக்கை நோக்கிச் செல்!தடுக்கி விழும்போதுஇமயம் தொட எழுஎன்னால் முடியும் - அந்ததாரக மந்திரம் ஒலிக்கட்டும்!உனக்கு எதிரிஉன் மனம் தான் அதற்கு கடிவாளமிடு வெற்றி - இனிகைக்கு எட்டும் துாரம் தான்!இந்த வாழ்க்கைஇயற்கை உனக்களித்தவரம் - அதில் இளமைஉனது மூலதனம்!ஒருதலை காதலும்அதிவேக பயணமும்குடிவெறியும், 'செல்பி'யும்தேகம் முழுக்க சந்தேகமும்...இளமை எனும்மூலதனத்தை அழித்துஉன்னை முதுமை எனும்பாலைவனத்திற்கு கடத்தும்பயங்கரவாதிகள்!இளைய சமுதாயமேபோதையிலிருந்து விடுபடுபுதிய சமுதாயம் உருவாக்கபீடுநடை போடு!பாரதி சேகர், சென்னை.