உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

'மே தினம்... சுப தினம்!'உலக மக்களின்சுப தினம்உழைப்பாளிகளின் மே தினம்!உழைப்பின் சப்தம்கருவியாகிறது!உழைத்தவன் ரத்தம்வியர்வையாகிறது!வாரிசுகளின் கண்களில்எதிர்பார்ப்பின் பிரதிபலிப்பு!உழைப்பாளிகளின் கண்களிலோஒரு கோடி ஜொலி ஜொலிப்பு!இருபதில் துவங்குகிறதுஉழைப்பாளியின் உழைப்பு!அறுபதில் நெருங்குகிறதுஆயுளின் அழைப்பு!இடைப்பட்ட காலம்முழுவதும் ஓட்டம்!இறுதி வரை இருப்பதில்லைவாழ்க்கையில் ஏற்றம்!காய்த்துத்தான் போகிறதுஉழைப்பாளிகளின் கைகள்! கனியாமலே போகிறதுஉழைப்பாளியின் கனவுகள்!சம்பள நாட்களில்காத்திருக்கிறது உறவுகள்!சர்வசதா காலமும்காத்திருக்கிறது வறுமை!உலகப் போர் ஆட்டமோஆண்டுக்கணக்கில் தான்உழைப்பாளிகள் போராட்டமோஆயுள் முழுமைக்கும்!என்றாலும் -உழைப்பை அவர்கள்நிந்திப்பதும் இல்லை; ஒரு நொடி கூடநிராகரிப்பதும் இல்லை!இவற்றை உணர்ந்துஉழைப்பாளிகளை உலகம்நினைக்க வேண்டிய தினம், 'மே தினம்!'நினைத்தால்...அதுவே அவர்களுக்கு, 'சுப தினம்!'சு. விஜயலட்சுமி, கடம்பூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !