கவிதைச்சோலை!
விடியல்!அன்புக்கில்லை அடைக்கும் தாழ்வள்ளுவர் ஏற்றிய விளக்கு...ஆழ்வார்களும், நாயன்மார்களும்ஆண்டவனுக்கு ஏற்றியது பக்தி விளக்கு!அறம் செய்ய விரும்புஅவ்வையார் ஏற்றிய தர்ம விளக்கு...பிறன்மனை நோக்காத பேராண்மைகம்பன் காட்டிய குடும்ப விளக்கு!ஆராயாத தீர்ப்புக்கு அறமே எமனாகும்இளங்கோவின் நீதி விளக்கு...வாடிய பயிரைக் கண்டால் உதவுவதுவள்ளலாரின் கருணை விளக்கு!உடம்பை வளர்க்க உயிர் வளருமென்றதுதிருமூலரின் மந்திர விளக்கு...காயமே இது பொய்யடா என்றுசித்தர்கள் காட்டியது ஞான விளக்கு!தீதும் நன்றும் பிறரால் வருவதில்லைபூங்குன்றன் ஏற்றிய புதுமை விளக்கு...யாதுமூரே யாவருங் கேளிர்மனிதம் போதிக்கும் மகத்தான விளக்கு!அச்சமில்லை அச்சமில்லை என்றுஆங்கிலேயரை எதிர்த்தது பாரதி விளக்கு...பெண்கள் பாடசாலை போகட்டுமென்றதுபாரதிதாசனின் கல்வி விளக்கு!காலமெல்லாம் எளிமையை பரப்பியதுகாமராசரின் நேர்மை விளக்கு...மண்ணுலகே வியந்திட வைத்ததுகாந்தியின் அகிம்சை விளக்கு!வாழ்க்கைப் பாதையை அழகாய்வெளிச்சம் போட்டுக் காட்டுகிறவிளக்கின் ஒளியில் நடந்து பாருங்கள்எந்நாளும் எல்லாருக்கும் விடியல் தான்!எஸ். குமாரகிருஷ்ணன், புதுச்சேரி.