கவிதைச்சோலை!
நம்மில் தம்மில்...அவன்அன்பு வார்த்தைகளைபுண்படுத்த வேண்டாம்பயன்படுத்த முயற்சி செய்வோம்!அவன்நடக்கும் பாதைகளைஅசிங்கப்படுத்த வேண்டாம்அலங்கரிக்க முயற்சி செய்வோம்!அவன்வழங்கும் வார்த்தைகளைகொச்சைப்படுத்த வேண்டாம்வாசம்மூட்ட முயற்சி செய்வோம்!அவன்சொல்லும் சூத்திரத்தைசிதைத்து விட வேண்டாம்விதைத்திட முயற்சி செய்வோம்!அவன்ஆசையின் எல்லைகளைஅடைத்து விட வேண்டாம்அடைந்திட முயற்சி செய்வோம்!அவன் காட்டிய வழிகளைஅலட்சியம் செய்ய வேண்டாம்லட்சியமாக்க முயற்சி செய்வோம்!இன்று அவன் இருக்கும் இடம்நாளை நமது புகலிடத்தின்முதலிடமாக இருக்கலாம்!ஆதலால்நற்பண்புகளைநம்மில் தம்மில்பரஸ்பரம் பரிமாறுவோம்!நம் பகைமைகளைநம்மில் தம்மில்பரஸ்பரம் பறித்தெறிவோம்!நம் வாசலில் பாசப்பூக்கள் பரப்பிவாசம் வலம் வந்து வசந்தம் ஊஞ்சலாடநம்மில் தம்மில் பரஸ்பரம்பந்தங்கள் புதுப்பித்துக் கொள்வோம்!க. அழகர்சாமி, கொச்சி,கேரளா.