உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

'நான்' எங்கே?* அழியா உறவும் நீ அழியும் உடலும் நீ...* பிரியா காதலும் நீபிரியும் உயிரும் நீ...* தணியா காமமும் நீதணியும் மோகமும் நீ...* பேசிய வார்த்தை நீபேசாத மவுனமும் நீ...* இமைக்கா நேரம் நீஇமை மூடும் இரவும் நீ...* ஆனந்தத்தின் உச்சம் நீஅழ வைக்கும் அச்சமும் நீ...* நிகழ்கால உண்மை நீ எதிர்கால பொய்யும் நீ...* வாழ்வின் கணமும் நீமுடிவில் மரணமும் நீ...* இப்படி —எல்லாம், 'நீ'யான பின்'நான்' எங்கே... நீயே சொல்!— கே.விஜயகுமார், கோவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !