உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

மறப்போம், மன்னிப்போம்!வாழ்க்கையில் எப்போதும் ஜெயிப்பவர் சிலரேவாசல் தோறும் வேதனை அனுபவிப்பவர் பலரேகுணமும், கொள்கையும் நல்லதானால்குறைவென்பது இல்லாமல் போய் விடும்!நன்றி கெட்ட உலகமடா இதுநல்லதை பிறருக்கு நினைக்காத காலமடாஉள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவோர்கள்ளம் கபடம் மிக்க கயவர்களே!நினைப்பதெல்லாம் நடப்பதற்கு கொடுப்பினை வேண்டும்நிம்மதி வேண்டுமெனில் நல்லவை எண்ண வேண்டும்சேரிடம் அறிந்து சேராவிடில் உன் வாழ்வுசேற்றினில் மூழ்கி சிதைந்து போய்விடும்!கொடுமைகளை களைய மன உறுதி வேண்டும்கொட்டம் அடிப்போரைத் திருத்துதல் கடினம்மனிதனின் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கிடமறத்தல் ஒன்றே மா மருந்தாகும்!கவலையை மறந்தால் ஆறுதல் கிட்டும்கஷ்டங்களைப் போக்கும் முதற்படி அதுவேயாகும்மன்னிக்கும் குணம் உன்னுள் தோன்றினால்மட்டற்ற மகிழ்ச்சி காண்பது திண்ணம்!எண்ணத்தில் பிறரின் தீமைகளைமறக்க முயல்வாய்எப்போதும் பிறரின் தவறுகளை மன்னிக்கநீ இறைவனாவாய்மறக்கவும், மன்னிக்கவும் மனம் ஒன்றே வேண்டும்மனித வாழ்வு நிறைவு காண அது ஒன்றே போதும்!எம்.ஆர். ஐஸ்வர்யா, காரைக்குடி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !