உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

தானாக அழியும் என்றிருந்தால்...நல்லதை நினைப்போம்நன்மையைச் செய்வோம்நல்லதே நடக்கும்நன்மையே கிடைக்கும்!நட்புகள் வளரட்டும்உறவுகள் தொடரட்டும்உண்மைகள் சிறக்கட்டும்உயர்வுகள் கிடைக்கட்டும்!அம்மாவும் - அப்பாவும்கண் கண்ட தெய்வங்கள்ஆசானும் - குல தெய்வமும்அருள் தரும் தெய்வங்கள்!குழந்தைகள் - முதியவர்கள்நாட்டின் செல்வங்கள்அரவணைத்துச் செல்வதுஅனைவரின் கடமை!நலமுடன் வாழ்வோம்வளமுடன் வாழ்வோம்மனிதநேய உணர்வுள்ளமனிதராக வாழ்வோம்!வறியோருக்குத் தேவையானஉதவிகள் செய்வோம்அவசியமான அனைத்தும்கிடைக்கச் செய்வோம்!எங்கே என்ன நடந்தாலும்உனக்கொரு பிரச்னை வரும் வரைஎனக்கென்ன என்று இருக்காதேஉனக்கு வந்த பின் தவிக்காதே!லஞ்சம், ஊழல், அராஜகம்எழுதினால் பட்டியல் நீண்டு விடும்புரையோடிய சமுதாயக் களைகளைஆணி வேரோடு களைய வேண்டாமா?தானாக அழியும் என்றிருந்தால்அதற்கு முன்பே நாமழிவோம் - நம்தலைமுறை வாழ வேண்டாமாசிந்தித்து செயல்பட வேண்டாமா?முடியாதென்று எதுவுமில்லைமுடியுமென்று நம்புவோம்முயற்சிகள் செய்வோம்முடித்துக் காட்டுவோம்!- சி. சந்திரமோகன், மதுரை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !