கவிதைச்சோலை!
வாழ்வின் பயணம் இனிது!மனதின் காட்டிலிருந்துநினைவுகளின் கைகளால்எதை பறிக்கப் போகிறோம்பூக்களையா, முட்களையா?வாழ்த்திய சொற்களைநினைத்துக் கொண்டால்வஞ்சகச் சொற்கள்மறந்து போகும்!புன்னகைத்த முகங்களைநினைத்துக் கொண்டால்திரும்பிக்கொண்ட முகங்கள்மறந்து போகும்!கிடைக்கப் பெற்ற உதவியைநினைத்துக் கொண்டால்மறுக்கப்பட்ட உதவிகள்மறந்து போகும்!துடிப்போடு எழுந்ததைநினைத்துக் கொண்டால்துவண்டு விழுந்ததுமறந்து போகும்!கூடியிருந்த பொழுதுகளைநினைத்துக் கொண்டால்தனித்திருந்த பொழுதுகள்மறந்து போகும்!அமுதுண்ட வேளைகளைநினைத்துக் கொண்டால்பசித்திருந்த வேளைகள்மறந்து போகும்!வெற்றி பெற்ற கணங்களைநினைத்துக் கொண்டால்சறுக்கிய கணங்கள்மறந்து போகும்!சுமைகள் அல்லதுாக்கிச் சுமக்கும் காலம் தான்கனத்து விடுகிறதுபஞ்சுப் பொதியாகினும்பாறாங்கல்லாகினும்!வெறுப்பூட்டும் நினைவுகளைமனதிலிருந்து உதறி விட்டால்இந்த வாழ்வின் பயணம் தான்எவ்வளவு இனிது!ர.கீர்த்தி, சென்னை