உள்ளூர் செய்திகள்

கவிதைச் சோலை - உள்ளொன்று வைத்து ...

* பிரபஞ்சத்தில்கருப்புப் பள்ளங்கள்பல சூரியன்களைவிழுங்கி ஏப்பம் விடுவதைவிஞ்ஞானிகள் காட்டுகின்றனர்!* மனித உள்ளங்களை தான்இன்னும்எட்டிக்கூட பார்க்க முடியவில்லை...உள்ளே விழுந்தசித்தர்கள், ஞானிகள்இன்னும் திரும்பவில்லை!* உள்ளமும், உதடுகளும்இணைந்தால்...உலகம் நம்மை தேடிவருமாம்!* கைநீட்டிகடன் கேட்கும் போதுபொய்யான வாய் பேசுகிறது...கொடுத்ததைதிருப்பிக் கேட்டால்உள்ளிருக்கும் உள்ளம் பேசுகிறது!*     சதிகார மனம் சொல்வதைநீங்கள் சட்டென கேட்பதற்குசண்டை வரவேண்டும்...இல்லையென்றால்சாவு வரவேண்டும்...அதனால்தான்மரண வாக்குமூலம்மகத்துவமாகிறது!*     எச்சில் பட்டேஇருப்பதாலோ என்னவோவாய்மையை மறப்பதற்காகசில வாய்கள்வருந்துவதே இல்லை!*     அவசரப் படுவதுதான்மனதுக்கு மரபாக இருக்கிறது...உதடுகள்காதலைச் சொல்வதற்குள்உள்ளம் பாய் விரிக்கிறது!*     மறைத்து வைத்து, மறைத்து வைத்துமகுடமா சூடப் போகிறோம்...அழகாக இருக்கிறீர்கள்...நன்றாகப் பேசுகிறீர்கள்...இதைக்கூடச் சொல்லாமல்என்னச் சாதிக்கப் போகிறோம்!*     நல்லவேளை...உண்மை அறியும் சோதனையைஇன்னும் நாம்காதலர்களுக்கோகணவன் - மனைவிக்கோகட்டாயமாக்கவில்லை...அப்படிச் செய்து விடாதீர்கள்...மனித வாழ்க்கை முடிந்து விடும்!*     உதடுகளில் மனமிருந்தால்மழலையில் நான் அழகாயிருந்தேன்!முகத்தில்பல முகமூடிகள் விழுந்ததால்முகவரியைத் தொலைத்து விட்டேன்!*     உதடுகளுக்கு வேண்டுமானால்சிகப்புச் சாயங்களைப்பூசிக் கொள்வோம்...வார்த்தைகளில் அதுகலந்து விடாமல்கவனமாக இருப்போம்!— மு.பாண்டியன்,   நெய்வேலி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !