கவிதைச்சோலை - காற்றின் ஸ்பரிசம்!
என் சுவாசக் காற்றேஉருவிலா உன்னைகருவறைத் தொட்டுகல்லறை வரைசில நொடிகள் பிரிந்திடினும்பறந்திடுவேன் விண்ணுலகம்!சோலைகளுக்குள்மவுனித்திடும் மரங்கள்உன் வருகையால்குதுாகலித்து அசைந்தாடுதே!பாஷை பல பேசி உறவாடுதேநீ, அதன் காதலியா?கடல் அலைகள்உன் சங்கமத்தால்குதித்து சதிராடுதேநீ அதன் தாயா?இசைக்கருவிகள்உன் ஊடுருவலால்மெல்லிசையாய் மாறிரசனையானதேநீ அதன் தாரமா?பணம், பதவிபார்த்திராதுஇல்லந்தோறும்உள்ளந்தொட்டுச்செல்கிறாய்...ஜாதி, மதம்சார்ந்திராதுசகல மனிதனையும்தேகந் தீண்டிச்செல்கிறாய்...உன்னைச் சுவாசிக்கும்எங்களுக்கும்தந்துவிட்டுச் செல்- உன்தார்மீகக் குணங்களை!கே. முத்துஷீலா, திருநெல்வேலி.