உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை - பூவையே... நீ பூவல்ல... வேர்!

காலையில் மலர்ந்துமாலையில் உதிரும்பூவல்ல நீ!நச்சுக் காற்றை உள்ளிழுத்துமூச்சுக் காற்றை வெளியிடும்இலையுமல்ல நீ!குரங்குகள் குந்திபழங்கள் தின்னும்கிளையுமல்ல நீ!விரிந்து பரந்தகிளைகளை தாங்கும்அடி மரமுமல்ல நீ!கல்லுாரி முடிக்கும் முன்னேகாதல் கணை உன் மீதுபாயலாம்!தேர்வெழுதும் நேரத்தில்தெரு முனை போராட்டம்உன்னை அழைக்கலாம்!விமான பயணம்வெளிநாட்டு வேலைமயக்கத்தை தரலாம்!கணவன் - மனைவிஉறவில் விரிசல்எப்போதும் விழலாம்!தாம்பத்ய வாழ்க்கையில்பிறந்த - புகுந்த வீடுபோர்க்களம் ஆகலாம்!காலம் மாறினாலும்கலாசாரம், பண்பாட்டைகட்டிக் காப்பவள் நீ!வேதனைகளையும்சோதனைகளையும்சாதனைகளாக்கபழகிக் கொள்!ஒருநாளில் அழியும்பூவல்ல நீ...ஊழிக் காற்றையும் தாங்கும்சமுதாய மரத்தின் வேர் நீ!பாரதி சேகர், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !