கவிதைச்சோலை - உன்நினைவுப் பிம்பங்கள்
*இரு விழிகள்பார்த்துப் பார்த்துக்கட்டிய பளிங்குகாதல் மாளிகை...கிரஹப்பிரவேசம்காணாமலே...அக்னிப்பிரவேசத்தில்ஆட்டம் கண்டது!*சூரியன்உதிக்கும் முன்பேகொதிக்கிறதுமனம் முழுக்கஉன் நினைவுகள்...சுட்டெரிக்கிறதுஎன் உணர்வுகளைகொஞ்சம்... கொஞ்சமாய்...*கோப்பைத்தேனீருக்குள்- ஓராயிரம்நுரைக்குமிழிகள்...ஒவ்வொரு குமிழியிலு<ம்வெடித்துச் சிதறுகிறதுஉன் முகம்!*பகல் முழுக்க என்னைதெருநாயாய் துரத்தும்உன் நினைவுகளோ...இரவில்-இன்னும்பூதாகரமாய்விஸ்வரூபமெடுத்து-என்தூக்கத்தைத் தின்றுதுக்க வாந்தியெடுக்கிறது!*உலவும் தென்றல்,பஞ்சணைப் படுக்கை,பால் நிலா ராத்திரி —ரசிக்க முடியவில்லைநிஜத்தில் நீயில்லாததால்...உறக்கம் மறந்தவிழிகளில் வழியும்கண்ணீர்த் திவலைகளில்கடந்த கால காதலின்உடைந்து போனநினைவுப் பிம்பங்கள்பிரதிபலிக்கிறதுகோணல்மாணலாய்!-மா.வினிதா, மதுரை.