உள்ளூர் செய்திகள்

ஓவிய மலை!

தென் அமெரிக்காவின், பெரு நாட்டில் இருக்கிறது, குஸ்கோவில் நகரம். இங்குள்ள ஆன்ட்ரியன் மலைத் தொடரை, ஓவிய மலை என அழைக்கின்றனர். இந்த, 5,200 மீட்டர் உயரமுள்ள மலைத் தொடரின் குன்றுகள் முழுவதும் பல வண்ணங்கள் பூசப்பட்டது போல் இயற்கையிலேயே மிக அழகாக காட்சியளிக்கிறது.இங்கு, குளிர் காலம் வந்துவிட்டால், ஜீரோவுக்கு கீழ் பனி பெய்யும். பனிக்காலம் முடிந்ததும் தான், சூரியனை பார்க்க முடியும். அப்போது, பனி உருகி மலைகளின் பாறைகளை காணமுடியும். அப்போது ஏற்படும் இயற்கை மாற்றத்தால், மலைத்தொடர் முழுவதும் பல பல வண்ணங்கள் பூசப்பட்டது போல் காட்சியளிக்கும். இந்த அழகிய காட்சிகளை காண, ஏராளமான சுற்றுலா பயணியர் இங்கு வருகின்றனர்.— ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !