சீனாவிற்கும், நமக்கும் இதுதான் வித்தியாசம்!
நம் நாட்டில், வேலை செய்யும் இடத்தில் பிற்பகலில் தூங்கினால், 'சார்ஜ் ஷீட் அல்லது மெமோ' என கடுமையான நடவடிக்கைக்கு உள்ளாவோம்.ஆனால், சீனாவில் நிலைமையே வேறு!அங்கு, பிற்பகல், ஒரு மணி நேரம் கட்டாய ஓய்வு அளிக்கப்படுகிறது. அப்போது, விளக்குகள் அணைக்கப்படும். ஊழியர்கள் தம் இருக்கையிலேயே தலையை கவிழ்த்து தூங்கலாம் அல்லது ஓய்வறையில் சென்றும் தூங்கலாம்.இப்படி, ஓய்வெடுத்த பின், வேலையை தொடருவதால், தனி நபரின் உற்பத்தி திறன் கூடும் என்பது சீனாவின் வாதம்.ஒரு மணி நேரம் மின்சாரமும் சிக்கனம்!— ஜோல்னாபையன்.