பிரிட்டிஷாருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர்!
நேரு, இந்தியாவின் முதல் பிரதமர் ஆனபோது, பிரிட்டனின் முதல் ஹைகமிஷனராக வ.கே.கிருஷ்ண மேனன் நியமிக்கப்பட்டார். இதை அறிந்து, அதிருப்தி தெரிவித்து, நேருவுக்கு கடிதம் எழுதினார், அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் க்ளெமன்ட் ஆட்லி.பதில் கடிதத்தில், 'கிருஷ்ண மேனன் வேண்டாம் என்றால், லண்டனுக்கு வேறு ஹைகமிஷனரை அனுப்ப மாட்டோம்...' என, குறிப்பிட்டார், நேரு. இதையடுத்து, கிருஷ்ண மேனன் பதவி ஏற்றுக்கொண்டார்.வெள்ளையரின், 'ப்ளடி இண்டியன்' பட்டியலில் இடம் பிடித்தவர், கிருஷ்ண மேனன். அந்த அளவுக்கு பிரிட்டிஷார் கண்ணில் விரல்விட்டு ஆட்டியவர், இவர்.ஜோல்னாபையன்