உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை - முயன்று பார்!

உயர உயரப் பறந்தாலும்ஊர்க் குருவி பருந்தாகாது...ஊர்க் குருவி ஏன் பருந்தாக வேண்டும்?அதற்கென ஓர் ஆற்றல்அதற்கென ஒரு சாதனைஅதுவே அதன் தனித்துவம்!உருவத்தில் சிறிய மீன்ஆறு, கடல், குளம், குட்டையெனஎங்கு விட்டாலும் நீந்தும்நீரின் தன்மை எதுவாயினும்தன் ஆற்றலைத்தான் மீன்அதிகம் நம்பியுள்ளது!முள் செடியில் பிறந்தாலும் ரோஜாதன் அழகாலும், மென்மையாலும் தான்அனைவரையும் ஈர்க்கிறது...அடுத்தவர் மீதான அன்பை வெளிப்படுத்தஓர் அடையாளப் பொருளானதுஅதுவே அதன் அற்புத ஆற்றல்!மரங்கள்மாசடைந்த காற்றைதுாய்மை செய்வதால் தான்மனிதன் ஆங்காங்கேமரத்திற்கு மஞ்சள் துணி கட்டிவணங்குகிறான்...சேவை மாசற்றதாயிருந்தால்வணங்குவது உண்மையாய் இருக்கும்!உன் ஆற்றலை வைத்துமுயன்று பார்...உன் தனித்தன்மையை நிரூபித்துவெற்றி பெறுவாய்!— மு.நடராசன், புதுச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !