உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  தாலுகா அலுவலகம் முன் பிச்சை எடுத்த பா.ஜ., பிரமுகர்

 தாலுகா அலுவலகம் முன் பிச்சை எடுத்த பா.ஜ., பிரமுகர்

துமகூரு: வீட்டுமனை பட்டா பெயர் மாற்றி கொடுக்க, லஞ்சம் கேட்ட அதிகாரிகளை கண்டித்து, துமகூரின் பாவகடா தாலுகா அலுவலகம் முன், பா.ஜ., பிரமுகர் பிச்சை எடுத்து போராட்டம் நடத்தினார். துமகூரு மாவட்டம், பாவகடா தாலுகாவில் வசிப்பவர் அனிதா. இவர் தன் பெயரில் இருந்த பட்டாவை, வேறு பெயருக்கு மாற்றித்தரும்படி கோரி, வெங்கடாபுரா கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் மனு அளித்தார். பட்டா பெயர் மாற்ற அதிகாரிகள், தேவையின்றி தாமதம் காட்டினர். அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை செலுத்தியும், பட்டா மாற்றி தரவில்லை. இது குறித்து, அனிதா கேட்டதற்கு, பட்டா மாற்றித்தர லஞ்சம் கொடுக்க வேண்டும் என, கிராம பஞ்சாயத்து செயலர் ஹேமந்த் நெருக்கடி கொடுத்துள்ளார். இது போன்று, பா.ஜ., பிரமுகர் முரளி என்பவரும், 30 க்கு 40 சதுர அடி பரப்பளவுள்ள வீட்டு மனையின் பட்டாவை மாற்ற, மனு அளித்திருந்தார். இவரிடமும் கிராம பஞ்சாயத்து செயலர் ஹேமந்த் லஞ்சம் கேட்டுள்ளார். அரசு பணிக்கு லஞ்சம் கேட்பதை கண்டித்து, பா.ஜ., பிரமுகர் முரளி, நேற்று நுாதன முறையில் போராட்டம் நடத்தினர். 'கிராம பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும். பிச்சை போடுங்கள்' என்ற போர்டை பிடித்தபடி, பாவகடா தாலுகா அலுவலகம் முன்பு, நேற்று போராட்டம் நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை