உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ரசாயன வாளியில் விழுந்த சிறுவன் பலி

ரசாயன வாளியில் விழுந்த சிறுவன் பலி

ஸ்ரீராமபுரம்: விளையாடும் போது, ரசாயனம் நிரம்பிய வாளியில் விழுந்ததில், பலத்த காயமடைந்த சிறுவன், 12 நாட்களுக்கு பின் நேற்று உயிரிழந்தார். பெங்களூரு எல்.என்.புராவில் வசித்தவர் ரமேஷ்குமார். இவர் மனைவி, 8 வயது மகள், ஓராண்டு 9 மாதங்கள் ஆன மகன் சுப்ரமணியுடன் வசித்து வந்தார். இவரது வீட்டு அருகிலேயே, காப்பர் மேக்கர் பேக்டரி உள்ளது. நவம்பர் 2ம் தேதியன்று, காலை 11:00 மணிக்கு சிறுவன் தன் அக்காவுடன், இந்த பேக்டரி அருகில் விளையாடினார். அப்போது எதிர்பாராமல், அங்கிருந்த ரசாயனம் நிரப்பப்பட்ட வாளியில் சுப் ரமணி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர், அங்கிருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கூடுதல் சிகிச்சைக்கா க தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால், சிகிச்சை பலன் அளிக்காமல், நேற்று அதிகாலை உயிரிழந்தார். ஸ்ரீராமபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை