மேலும் செய்திகள்
9ம் வகுப்பு மாணவி துாக்கிட்டு தற்கொலை
6 hour(s) ago
போதையில் அட்ராசிட்டி மரக்கன்று நட உத்தரவு
6 hour(s) ago
தர்ஷன் மேல்முறையீட்டு மனு ஐகோர்ட்டில் இன்று விசாரணை
6 hour(s) ago
ஷிவமொக்கா: ''அடுத்த சட்டசபை தேர்தலில் ஷிவமொக்கா நகர் தொகுதியில் போட்டியிடுவேன்,'' என முன்னாள் துணை முதல்வரும், பா.ஜ.,விலிருந்து நீக்கப்பட்டவருமான ஈஸ்வரப்பா கூறி உள்ளார். நேற்று அவர் அளித்த பேட்டி: வரும், 2028ல் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், ஷிவமொக்கா நகர் தொகுதியில் போட்டியிடுவேன் அல்லது எனது மகன் கந்தேஷை களத்தில் இறக்குவேன். தற்போதைய சூழலில் பா.ஜ., தேர்தலை சந்தித்தால் நிச்சயம் தோல்வியை தழுவும். பல தொகுதிகளில் கோட்டைவிடும். இதையெல்லாம் சரி செய்ய வேண்டும். பா.ஜ.,வில் உள்ள அனைத்து தலைவர்களின் பிள்ளைகளுக்கும் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆனால், எனது மகனுக்கு மட்டும் 'சீட்' வழங்கப்படவில்லை. மற்றவர்களுக்கு ஒரு நீதி, ஈஸ்வரப்பா குடும்பத்திற்கு என தனி நீதியா. இது நீதியல்ல அநீதி. இவ்வாறு அவர் பேசினார்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago