உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  தனியார் மருத்துவமனையில் நாய், பாம்பு கடிக்கு   முன்பணம் வாங்காமல் சிகிச்சை அளிக்க உத்தரவு

 தனியார் மருத்துவமனையில் நாய், பாம்பு கடிக்கு   முன்பணம் வாங்காமல் சிகிச்சை அளிக்க உத்தரவு

பெங்களூரு: ''தனியார் மருத்துமனைகளில் நாய், பாம்பு கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்பணம் வாங்காமல் சிகிச்சை அளிக்க வேண்டும்,'' என மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. மாநில அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: அனைத்து அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசிகள் கட்டாயம் இருக்க வேண்டும். நாய், பாம்பு கடியால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு வருவோருக்கு இலவசமாக முதலுதவி சிகிச்சை வழங்கப்பட வேண்டும். அவர்களிடம் முன்பணம் எதுவும் கேட்கக்கூடாது. எந்த விலங்குகள் கடித்தாலும் தனியார் மருத்துவமனைகளில் முன்பணம் வாங்காமல் கட்டாயம் சிகிச்சை அளிக்க வேண்டும். போதிய அளவு வசதிகள் இல்லாத தனியார் மருத்துவமனை நிர்வாகம், பாதிக்கப்பட்டவருக்கு முதலுதவி அளித்துவிட்டு, அந்நபரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு பாதுகாப்பாக அழைத்து செல்ல வேண்டும். இதற்காக செலவை மாநில அரசு ஏற்கும். இந்த விதிகளை பின்பற்ற தவறினாலோ, பாதிக்கப்பட்டவருக்கு மரணம் ஏற்பட்டாலோ மருத்துவமனை நிர்வாகத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்படும். மருத்துவமனை உரிமையாளருக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும். 2030ம் ஆண்டுக்குள் வெறிநாய் கடியால் ஏற்படும் இறப்புகள் பூஜ்யம் என்பதை இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை