உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பெங்., - மங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் மத்திய அரசுக்கு கோரிக்கை

 பெங்., - மங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் மத்திய அரசுக்கு கோரிக்கை

பெங்களூரு: 'பெங்களூரில் இருந்து கடலோர மாவட்டமான மங்களூருக்கு வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும்' என, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிற்கு, சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கடிதம் எழுதி உள்ளார். கடிதத்தில் அவர் குறிப்பிட்டு உள்ளதாவது: பெங்களூரும், மங்களூரும் கர்நாடகாவின் இரு முக்கிய பொருளாதார சக்தியாகும். பெங்களூருக்கு மாற்றாக, மங்களூரை அதிநவீன வேலை வாய்ப்பு, தொழில்துறை தலமாக மாற்றுவதே எங்கள் அரசின் முக்கிய குறிக்கோள். இருப்பினும், இவ்விரண்டு நகரங்களுக்கு இடையே வேகமான போக்குவரத்து இணைப்பு இல்லை. இது, தட்சிண கன்னடா மாவட்ட வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. தற்போது தொழிலதிபர்கள், தொழில் வல்லுநர்கள், சில மணி நேர பணிக்காக, இரவு முழுதும், இவ்விரு நகரங்களுக்கு இடையே பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்காகவும், இவ்விரு நகரங்கள் இடையே வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும். மங்களூரில் இருந்து பெங்களூருக்கு அதிகாலை 4:00 மணி; காலை 10:00 மணி; மாலை 6:00 மணி என மூன்று வந்தே பாரத் ரயில்களை இயக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை