உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  சொத்துக்காக தாயை தாக்கிய மகன் கைது

 சொத்துக்காக தாயை தாக்கிய மகன் கைது

முல்பாகல்: சொத்துக்காக தாயை இரும்பு கம்பியால் தாக்கிய மகன் கைது செய்யப்பட்டார். முல்பாகலின் தேவராய சமுத்ரா என்ற கிராமத்தில் வசிப்பவர் நாராயணம்மா, 69. இவருக்கு மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனர். நாராயணம்மா பெயரில், ஒரு அரிசி மாவு மில், ஒரு வீடு உள்ளது. மூத்த மகன் சுப்ரமணி, 51. இவர், தனது தாய் பெயரில் உள்ள மாவு மில் மற்றும் வீட்டை தன் பெயரில் பதிவு செய்து தருமாறு, தாயிடம் கேட்டு தகராறு செய்து வந்தார். நாராயணம்மாவின் இரண்டாவது மகன் சிவகுமார், 42, பெஸ்காம் நிறுவனத்திலும்; மூன்றாவது மகன் குமார், 38, கர்நாடக அரசின் போக்குவரத்துத் துறையில் மெக்கானிக்காகவும் பணியாற்றி வருகின்றனர். தம்பிகள் இருவருக்கும் அரசு வேலை உள்ளது; எனக்கு வேலை எதுவும் இல்லை. எனவே தாய் பெயரில் உள்ள சொத்துகளை தனக்கு வழங்க வேண்டும் என்று அடிக்கடி தகராறு செய்து வந்தார். இந்நிலையில் நேற்று தகராறு நடந்தது. கோபத்தில் இருந்த சுப்ரமணி, தாயின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இதனால் அவர் பலத்த காயம் அடைந்தார். முல்பாகல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. போலீசார், சுப்ரமணியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை